சற்று நேரத்தில் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்.....2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் டிசம்பர் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த பரீட்சையில் 7 லட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சை நாளாந்தம் காலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளதுடன் பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்னராக பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இதனை தெரிவித்தார்.

இதேவேளை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக கிடைக்கப்பெறும் சகல முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக விசேட விசாரணை குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிக பரீட்சை கண்காணிப்பு குழுக்கள் நாட்டின் சகல பகுதிகளையும் உள்ளடக்கியவாறு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் தொடர்பிலான எதேனும் மோசடிகள் அல்லது முறைக்கேடுகள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பில் 1911 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அல்லது 011 27 84 208 / 011 278 45 37 ஆகிய தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக அறிவிக்க முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.