வாகனங்களில் இனி இதற்கு தடை!


வாகனங்களில் air horn பயன்படுத்துவதைக் குறைப்பதன் மூலம் ஒலி மாசுபாட்டின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பேருந்து சாரதிகள் மற்றும் இதர வாகனங்களின் சாரதிகளை அறிவுறுத்தும்படி பொலிசாருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய பல முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாரம் இது தொடர்பில் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுமெனவும், அதன்பின்னர் அடுத்த இரண்டு வாரங்களிற்குள் air hornகளை வாகனத்திலிருந்து அகற்ற வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.